2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி நீதிமன்றில் பலத்த பாதுகாப்பு

George   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இரு வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஆஜர்ப்படுத்தபடும் போது, பலத்தபாதுகாப்புக்கு மத்தியில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டனர் என தெரிவிக்கப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வழக்கு,கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு, எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதேவேளை, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐந்து பொலிஸார் தொடர்பான வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த இரு வழக்குகளிலும் சந்தேக நபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நீதிமன்றுக்கு கைதிகளை அழைத்துவந்த போது, வழமைக்கு மாறாக பலத்த பாதுகாப்புகளுடன் அழைத்துவரப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .