2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘சட்டவிரோத மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும்’

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - பூநகரிக் கடற்பரப்பில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துமாறு, பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களினால், அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூநகரிக் கடற்றொழிலாளர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி காரணமாக, உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல தடவைகள் நடைபெற்ற கூட்டங்களிலும் இது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்ட போதிலும், அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் கடற்றொழிலாளர்கள், குறிப்பாக, நாச்சிக்குடா பகுதிக்கு வருகை தரும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களினால் சட்டவிரோத மீன்பிடி கூடுதலாக இடம்பெறுகிறது எனவும் இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .