2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'சொந்த மண்ணில் கால்பதிக்கும் வரை போராடுவோம்'

George   / 2017 மே 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

“யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, மீளக்குடியேறியும் தமக்கு நிரந்தரமான வாழ்விடம் இன்றி தெருவோரத்தில் அலைந்து திரிகின்றோம்” என, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - கேப்பாபுலவு பூர்வீகக் கிராம மக்கள், தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர்அதனை விடுவித்து, தமது சொந்த நிலங்களில் வாழ அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை இன்றுடன் 71 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து, 41 மீனவக் குடும்பங்களும் 97 விவசாயக் குடும்பங்களும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“யுத்தம் காரணமாக வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்த போதிலும், கடந்த ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். 70 நாட்களாக போராடிவரும் நாங்கள் பல நோய்த் தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளோம். வீதியில் எத்தனை நாட்களுக்கு அவல வாழ்க்கை வாழ்வது?” என்றனர்.

“எமக்கு தீர்வு கிடைக்கும் வரை, எந்த இடர்கள் வந்தாலும் சொந்த மண்ணில் கால் பதிக்கும்வரை வீதியில் இருந்து போராடுவோம்” என்றும் கேப்பாபுலவு மக்கள் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .