2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'சிறுவர்களின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“இளையோர்களை, எதிர்காலத்தில் நல்லொழுக்கம் மிகுந்தவர்களாகவும் தலைமை தாங்கும் பண்பு மிகுந்தவர்களாகவும் வளர்த்தெடுக்க அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற, துணுக்காய் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வன்னி மாவட்டத்தில் யுத்தத்தில் இருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றார்கள். திட்டமிட்டு இளையோர் பிழையான வழிகளுக்கு செல்வதற்கான முஸ்தீப்புக்களை திரைமறைவில் இனவாதிகள் செயல்படுத்துகின்றார்கள்.

இளையோரை அவ்பொறியில் இருந்து மீட்டெடுக்க இந்த அறநெறி பாடசாலைகளை அடித்தளமாக கொண்டு அரசாங்க, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

தொழில்நுட்ப, கலை, கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் ஏற்பாட்டில், துணுக்காய் பிரதேச அறநெறி ஆசிரியர்களுக்கு கனடாவில் இருந்து வருகைதந்த வைத்திய கலாநிதி இலம்போதரனால் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .