2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா?'

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், “தடுமாறும் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்து என்ன?” எனும்  கருத்தாய்வு  பகிர்வுறவாடல் நிகழ்வு நாளை (22) காலை 9 மணிக்கு வவுனியா நகர விருந்தினர் விடுதி (வாடிவீடு) மண்டபத்தில் நடை பெறவுள்ளது.

இவ் உயர் நிலைக் கருத்தாடலில் பிரதானமாக ஐந்து தலைப்புக்களில் துறைசார்ந்த நிபுணர்களால் ஆய்வியல் நோக்கில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

குறிப்பாக ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
புதிய அரசியல் அமைப்பு, மனித உரிமைகள் ஆணையகத்தின் இரண்டு ஆண்டு காலக்கெடு, நிலவிடுவிப்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், இவை தொடர்பில் அடுத்து என்ன? எனும் நோக்கில் ஆராயப்படவுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைசார் அரசியல் விவகாரம் என்பதால், தமிழ்த் தலைமைகள் வட, கிழக்கு கருத்தியலாளர்கள் என பல  செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, தார்மீக அடிப்படையில் சம்மத்தப்பட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .