2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'தொழிற்பயிற்சிகளைப் பெறுவதற்கு இளைஞர், யுவதிகளுக்கு ஆர்வமில்லை'

George   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  1 இலட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் வரையில் இதுவரை மீள்குடியேறியுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறியவர்களில் அதிகளவானோர், தொழில்வாய்ப்புக்கள் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில்  அதிகளவான இளைஞர், யுவதிகள் உள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது, “முல்லைத்தீவு மாவட்டத்தில் 18ஆயிரம் வரையான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்பின்றியுள்ளனர்.

இங்கு தொழில் நுட்பக்கல்லூரியுள்ளது. தொழில்சார் பயிற்சிகளை பெறுவதற்கு இளைஞர், யுவதிகள் விருப்பம் காட்டுவதில்லை.  தற்போது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் வகையில், கிளிநொச்சி அறிவியில் நகர்ப்பகுதியில், இலங்கை -ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையம் இயங்குகின்றது. ஆனாலும், தொழிற்பயிற்சிகளைப் பெறுவதற்கு இளைஞர், யுவதிகள் ஆர்வம் காடடுவதில்லை” என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .