2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'தொழிலாளர் தினத்தில் துக்கம் அனுஷ்டிப்போம்'

George   / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தொழிலாளர் தினத்தை புறக்கணித்து, துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், 54ஆவது நாளாக இன்று தினம் ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“இத்தனை நாங்கள் போராடியும் அரசாங்கம் எந்தவித தீர்வையும் வழங்காத நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

தொழிலாளர் தினமான நாளை, உழைக்கும் உறவுகளை தொலைத்துள்ள நாம், என்ன உரிமைகளை நாளைய தினம் கோருவது.  உறவுகள் இல்லாத நிலையில், எமது குடும்பங்களை பார்க்க யாருமற்ற நிலையில், வாழ்வாதார ரீதியாக பல்வேறு துன்பங்களை சந்திக்கின்றோம்.

நாம் வீதியிலிறங்கி போராடிவருகின்றபோதும் எமக்கு இதுவரை எந்த தீர்வும் இல்லை. எனவே, நாம் இதனை புறக்கணிக்கிறோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .