Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், சண்முகம் தவசீலன்
நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, எமது வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைமைகளும் எமது வாக்குகளால் ஆட்சி அமைத்துக்கொண்ட நல்லாட்சி அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என, முல்லைத்தீவு கேப்பாப்புலவின் விமானப்படை முகாமுக்கு முன்பாக போராட்டம் நடாத்தும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக, தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்கவேண்டுமெனக் கோரி, அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம், ஆறாவது நாளாக நேற்றும் (05) தொடர்ந்தது.
போராட்டம் நடத்தும் மக்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று (05) சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தனர். அத்துடன், அரசியவாதிகள் பலர் சந்தித்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மக்கள்,
“எமது நிலங்களை விடுவிப்பதாகவும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய பதில் வழங்குவதாகவும் தெரிவித்தே அவர்கள் எங்களுடைய வாக்குகளை பெற்றனர். ஆனால் வாக்குறுதிகள் கடந்த 2 வருடங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை.
நிலங்கள் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் நில விடுவிப்பு எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. எமது போராட்டத்தை அரசியல்வாதிகள் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனரே தவிர பொறுப்பு வாய்ந்த பதில்களையோ, உரிய நடவடிக்கையையோ மேற்கொள்ளவில்லை. எனவே உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago