Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
George / 2016 மே 11 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
'முக்கொம்பன் கிராமத்தைச் சூழவுள்ள கிராமங்கள் அனைத்தும் முக்கொம்பனில் அமைந்துள்ள பால் உற்பத்தி பதனிடல் நிலையத்தின் பயனாளிகளாக மாறவேண்டும்' என பூநகரிப் பிரதேச செயலர் சி.ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பூநகரி முக்கொம்பனில் யு.என்.டிபி மற்றும் எவ்.ஓ.ஏ ஆகிய நிறுவனங்களின் 4 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட பால் உற்பத்தி பதனிடல் நிலையம் செவ்வாய்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கூறுகையில், 'எமது பிரதேசத்தின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பூநகரி பிரதேசத்தில் இருக்கின்ற சுமார் 7,200 குடும்பங்களில் கணிசமான குடும்பங்கள் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன. விவசாயிகளும் கால்நடை வளர்ப்பை விவசாயத்துடன் மேற்கொள்கின்றனர்.
முக்கொம்பன் பிரதேசத்துக்கும் கால்நடை அபிவிருத்தித் தொடர்பான அடுத்தகட்ட அதாவது உற்பத்திப் பொருட்களை தேசிய ரீதியிலான உற்பத்திப் பொருட்களுடன் இணைப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பொருட்டு இப்பிரதேசத்திற்குரிய கால்நடை உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தவும் உற்பத்தி செய்யவும் வழியேற்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago