2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பன்றிக் காச்சல்: கிளிநொச்சியில் 244 பேருக்கு சிகிச்சை

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில், பன்றிக்காய்ச்சல்  (H1N1 இன்ப்ளுவன்சா) நோய்த் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 244 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான பெப்ரவரி 10ஆம் திகதி தொடக்கம் கடந்த 3ஆம் திகதி வரையான  21 நாட்களில், இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சிகிச்சைப் பெற்றுள்ளதுடன், இவர்களுள் 25 கர்ப்பிணிகள்,  9 சிறுவர்களும் உள்ளிட்ட 37 பேர்,  H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருநகர், புதுமுறிப்பு, தருமபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வாநகர்,வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான நிலையில், கர்ப்பிணிகள் இனங்காணப்பட்டு, சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

கண்டாவளை,விவேகானந்தநகர்.ஸ்கந்தபுரம், கல்மடுநகர்,  உமையாள்புரம். இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து, 12 வயதுக்கு குறைவான சிறுவர்கள், பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளான நிலையில், இனங்காணப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
உதயநகர்மேற்கு, புதுமுறிப்பு, கல்மடுநகர்,  திருவையாறு ஆகிய இடங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள்  பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளானதாக இணங்காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .