2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'பரவிப்பாஞ்சான் காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்'

George   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

பரவிப்பாஞ்சானில் மக்களின் காணியில் முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர், பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் கூறினர்.

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் மக்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை (23) பிற்பகல் குறித்த பகுதிக்கு இராணுவ உயரதிகாரிக்ள, கரைச்சி பிரதேச செயலாளர், காணிவெளிக்கள உத்தியோகத்தர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உள்ளிட்டவர்கள் இராணுவ முகாமுக்குள் சென்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது, காணிகளை அடையாளம் காட்டிய மக்கள் காணியை விரைந்து விடுவித்து தருமாறு கோரினர்.
பிரதேச செயலரால் காணிகள் அடையாளம் காட்டப்படுமிடத்து, அக்காணிகளில் இருந்து தாம் வெளியேற தயாராக இருப்பதாக, இராணுவத்தினர் தெரிவித்ததாக பரவிப்பாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் காணிகள் விடுவிக்கப்படும்வரை தாம் தொடர் பொராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .