2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'பொய் வாக்குறுதி வழங்கினால் பாடம் புகட்டுவோம்'

George   / 2017 மே 09 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“இரணைதீவு மண் எமது உயிர் மூச்சு. நாம் பூர்வீக நிலங்களை இழந்து 26 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், எமது தாய் நிலத்தில் பாக்கு நீரிணையை கண்காணிக்கும் பாரிய ராடார் தளங்களை நிறுவ முயற்சிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை” என,  இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

8ஆவது நாளாகவும் நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அந்த மக்கள், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “எமது மண்ணை அபகரித்து அதில் கடற்படைக்கு பாரிய ராடார் தளத்தினை நிறுவி கடற்கண்காணிப்பில் ஈடுபடப்போவதால் அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யமுடியாது என, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

“எமது உயிர் போனாலும் பாரம்பரியமாக தொழில் செய்துவந்த பூர்வீக நிலத்தை, கடற்படைக்கோ வேறு எந்தத் தேவைகளுக்கோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை. எமது நிலம் எமக்கு வேண்டும். அதுவரை எமது உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எவ்வாறான அழுத்தம் வந்தாலும் நாம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.

“கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவாக பொய் வாக்குறுதிகளை வழங்கி எமது போராட்டங்களை சிதைக்க, தமிழ் அரசியல்வாதிகள் முனைந்தால், அவர்களுக்கு தகுந்த பாடத்தை எதிர்வரும் தேர்தலில் புகட்டுவோம்” எனவும் அவர்கள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .