Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 05 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா, வைரவபுளியங்குளம் மைதானத்துக்கு முன்பாக பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென, வவுனியா தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வைரவபுளியங்குளத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தனியார் கல்வி நிலையங்களுக்கு தூர இடங்களிலிருந்தும் அதிகளவான மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இச் சுற்றாடலில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் தொடர்பாக, பெற்றோர் முறையிட்டு வருகின்றனர்.
கற்றல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நபர்கள், மது அருந்துதல், போத்தல்களை உடைத்தல், பெண் பிள்ளைகளுடன் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்ளல், மாணவர்களை வீண் வம்புக்கு அழைத்தல் மற்றும் குழுச்சண்டை போன்ற பல விடயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு சிறந்த சூழலை உருவாக்குவதற்கு, அப்பகுதியில் பொலிஸ் காவலரனொன்று அமைக்கப்படவேண்டுமென, வவுனியா தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் கோரியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago