2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'மணல் அகழ்வினை கட்டுப்படுத்த சமூகப் பொறுப்பு ​​வேண்டும்'

George   / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி, வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் நடைபெறுகின்ற மணல் அகழ்வினை சமூக பொறுப்பின் அடிப்படையில் கட்டுப்படுத்த வேண்டும்” என, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.

வன்னேரிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சிறுபோகக் கூட்டத்தில், “வன்னேரிக்குளத்தின் பின்பகுதியில் பெருமளவு மணல் அகழ்வு நடைபெறுவதன் காரணமாக, குளத்துக்கு பாதிப்பு உள்ளது” என, தெரிவிக்கப்பட்டது.

“இந்நிலையில், மணல் அகழ்வு தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டபோது, “வன்னேரிக்குளத்தின் மணல் அகழ்வினை நீர்ப்பாசனத் திணைக்களம் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. அது சமூக பொறுப்பின் அடிப்படையில் இடம் பெற வேண்டும். வன்னேரிக்குளத்தில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுகின்றவர்களே மணல் அகழ்விலும் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக கிராம மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு வேண்டும்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .