Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 13 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்
“கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து இங்கு வந்து நாங்கள் குடியமர்ந்துள்ளோம். இன்று வரை, எங்களுக்கு நிரந்தரக் காணி வழங்கப்படவில்லை.
கிளிநொச்சிக்கு வந்த காலத்தில், இங்கு அதிகளவான அரச காணிகள் இருந்தன அங்கு எங்களை குடியமர்த்தியிருக்கலாம், அதனையும் மேற்கொள்ளவில்லை நாங்கள் இப்பொழுதும் காணியற்ற மக்களாக, அகதியாக வாழ்கின்றோம்.
மலையகத்தில் இருந்த ஏழைகள் என்பதால், எங்கள் விடயத்தில் அக்கறையின்றி இருக்கின்றீர்களா? என அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் பன்னங்கண்டி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேசச் செயலக பிரிவுக்குட்பட்ட, பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் பத்தாவது நாளாக இன்று 13) தொடர்கிறது.
காணி அனுமதி பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள், தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்றனர். இந்த மக்கள் 1990ஆம் ஆண்டு முதல், மேற்படி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் வாழ்கின்ற பிரதேசம் பன்னங்கண்டி பசுபதிகமம் என அழைக்கப்படுகிறது. இது இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபராக இருந்த சிவாபசுதி என்பவரின் காணியாகும் தென்னிலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக, இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த மக்களில் சிலரை, அப்போதே நிர்வாகத்தினர் இந்தக் காணிகளில் குடியேற்றியுள்ளனர்
ஆனால், இன்று வரை இந்த மக்களுக்கு சொந்தமாக காணியோ, வீட்டுத்திட்டங்களோ,அல்லது அரசின் ஏனைய எந்த உதவித் திட்டங்களும் கிடைக்காத நிலையில், வாழ்கின்றனர்.
“அகதி முகாம் வாழ்க்கையை விட மோசமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக, பல முறை தெரிவித்தும், எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை” என, இந்த மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
“தேர்தல் காலங்களில் வீடு வீடாக வரும் அரசியல்வாதிகள், தாங்க்ள தெருவில் இறங்கி பத்துநாளாக போராடுகின்ற போது, வெறுமனே வந்து பார்த்துவிட்டு வாக்குறுதி வழங்கிவிட்டு சென்றுவிட்டார்களே தவிர, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்களா என்பது சந்தேகமே” என, இந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago