2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

'முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கேளிக்கையாக மாற்ற வேண்டாம்'

George   / 2017 மே 09 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

“முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவு கூரும் நாளை, விளையாட்டுக்களை நடத்தி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம்” என, முல்லைத்தீவு மாவட்ட சிவில் அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

முல்லைத்தீவில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒழுங்குசெய்த ஊடக சந்திப்பொன்று கள்ளபாடு பொதுநோக்கு மண்டபத்தில் ஞாயிற்றுகிழமை பிற்பகல் நடைபெற்றது.

“இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி அவர்களது உறவினர்கள் தொடர் கவனயீரப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களது துன்பத்தை உணராதவர்கள் சிலர்,  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது வேதனையளிக்கின்றது.

“எமது இனத்தின் சுயமரியாதை மற்றும் தன்மானத்தை இழந்த நாளை நினைவு கூருவதற்காக கால்பந்தாட்ட போட்டியை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முள்ளிவாய்ககால் என்ற பெயரை பயன்படுத்தி மே மாதத்தில் எந்தவொரு நிகழ்வையும் முன்னெடுக்கவேண்டாம்” என, இச்சந்திப்பில் கலந்துகொண்ட சிவில் அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .