2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'மாவீரர் துயிலுமில்லங்களை புனித தளங்களாக மாற்ற வேண்டும்'

Niroshini   / 2017 மார்ச் 04 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் புனிதஸ்தளங்களாக மாற்ற மாவட்ட அபிவிருத்தி குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கோரிக்கை விடுத்தார்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன்போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

வடக்கில் உள்ள பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்களை வடமாகாண சபையூடாகவும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களினூடாகவும் புனிதஸ்தளங்களாக மாற்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித தளங்களாக மாற்ற இந்த அபிவிருத்தி குழுவிடம் கோரிக்கையினை முன் வைக்கின்றேன்.

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுபூர்வமான மண்ணாக குறித்த மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன.

எனவே, உணர்வுபூர்வமாக குறித்த மாவீரர் துயிலுமில்லங்களை புனிதஸ்தளங்களாக மாற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு அங்கிகாரம் வழங்க வேண்டும்.

இதன் போது மக்கள் சுதந்திரமாக சென்று அஞ்சலி செலுத்த முடியும்.

எனவே, மாவட்ட அபிவிருத்தி குழு எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார்.

குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக்குழு, உரிய அதிகாரிகளுக்கு குறித்த மாவீரர் துயிலும் இல்லம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .