2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'ரயில் நிலையத்துக்கு மாற்றுத் திறனாளிகள் செல்ல முடியவில்லை'

George   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

'கிளிநொச்சி ரயில் நிலையத்தில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு  அமைக்கப்பட்டுள்ள  விசேட வழி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

குறித்த வழி, மாற்றுத்திறனாளிகள் சக்கர கதிரையுடன்  செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும், அதன் சரிவு தன்மையானது சக்கர கதிரைக்குரிய வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, பொதுக் கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான வழி, அமைக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், பெரும்பாலான இடங்களில்  அவை நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்றும், இதனால், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .