Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 ஜனவரி 22 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கடந்த நாட்களான நிலவிய கடுமையான வரட்சி காரணமாக அழிவடைந்த பயிர்ச்செய்கைகளுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுத்தருமாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கான ஏக்கர் நிலங்களின் மேற்கொள்ளப்;பட்ட பயிர்செய்கைகள், அழிவடைந்து காணப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஓரளவு மழை பெய்;து வருகின்றபோதும், எஞ்சியிருக்கின்ற குறைந்தளவு பயிர் செய்கைகளையே, பாதுகாக்க முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, வரட்சியால் தங்களது பயிர்கள் அழிவடைந்;;ததால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாகவும், எனவே, தங்களுக்கான நிவாரண உதவிகளைப் பெற்றுத் தருமாறும், விவசாயிகள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
வரட்சியின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில், 23 ஆயிரத்து 466 ஹெக்டேயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையில், 8,470 ஹெக்டேயர் அழிவடைந்துள்ளதாகவும் 926 ஹெக்டேயரில் மேற்கொள்ளப்பட்ட மேட்டு நிலப்பயிர்; செய்கையில், 167 ஹெக்டேயர் பகுதியும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் 19,206 ஏக்கர் பயிர்செய்கை முற்;;றாக அழிவடைந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின்; மாந்தை கிழக்;கு, துணுக்காய், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று, வெலிஓயா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட காலபோல நெற்செய்கை மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட மேட்டுநிலப்பயிர்செய்கைகளும் இவ்வாறு அழிவடைந்;துள்ளன.
எனவேதான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
3 hours ago
7 hours ago