Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Niroshini / 2016 ஜூன் 21 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தில் வீடுகளை கட்டவுள்ளவர்களுக்கு மணல் பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டரீதியான விசேட அனுமதியை வழங்குவதற்கு மாவட்டச் செயலகம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.
கிளிநொச்சியிலுள்ள ஆற்றுப்படுக்கைகளில் மணல் அகழ்தல் மாவட்டச் செயலகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் மணல் அகழ்வு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும்,வீட்டுத்திட்ட பயனாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கள் வீடுகளை அமைக்க மணல் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு அவர்கள் மணல் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டம் ஒன்று மாவட்டச் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யாழ்.மாவட்டத்திலும் வீட்டுத்திட்டப் பயனாளிகள் மணல் பெறுவதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நாகர்கோவில் பகுதியிலிருந்து மணல் அகழ்வற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் மணல் அங்கிருந்து அகழப்படுகின்றது. அதிக விலையில் மணல் விற்பனை செய்யப்படுவதால், வறுமை நிலையிலுள்ள வீட்டுத்திட்ட பயனாளிகள் மணல் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் தேவைக்கான மணலை சரியான பொறிமுறையில் விநியோகம் செய்யும் நடவடிக்கை கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என கடந்த காலங்களில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், அது இன்று வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சீமெந்து பைகளில் அடைத்து விற்கப்படுவது போல, மணலையும் பைகளில் அடைத்து கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விற்பனை செய்யும் பொறிமுறையை உருவாக்குவதாக முதலமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago