2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வறட்சி காரணமாக முல்லைத்தீவில் 33,000 குடும்பங்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், தற்போது நிலவும் வறட்சி காரணமாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த 33 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகம் செவ்வாய்க்கிழமை (12) தெரிவித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று, ஒட்டுசுட்டான், வெலிஓயா பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை  வழங்கும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்  தெரிவித்தார்.

வறட்சியினால் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்ட விவசாயம், மீன்பிடி தொழில்கள் சார்ந்த மக்களுக்கு உலக உணவு ஸ்தாபனம் மூலம் உலர் உணவுப் பொருட்கள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X