2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தந்தை செல்வாவின் 116ஆவது பிறந்ததின நிகழ்வு

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழர்களின் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 116ஆவது சிரார்த்த தினம் இன்று (31) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் காலை 6 மணிக்கு இறம்பைக்குளம் அந்தோனியர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் மதியம் 12 மணிக்கு வவுனியா குருமன்காடு காளிகோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .