2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மடு திருவிழா: 750 பொலிஸார் பாதுகாப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொறோசேரியன் லெம்பேட்


மடு திருத்தலம் மற்றும் அதனை சூழ்ந்துள்ள பகுதிகளில் பக்தர்கள் முகாமிட்டிருக்கும் நிலையில், திருவிழா கால பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் அத்தியேட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியேட்சகர் தலமையில் சுமார் 750 பொலிஸார் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மடு அன்னையின் வருடாந்த ஆவணித்திருவிழா கடந்த 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்;வரும் 15ஆம் திகதி திருவிழாவுடன் நிறைவடைகின்றது.

இதேவேளை, திருவிழாவுக்;கான நவ நாள் ஆராதனைகள் தினமும்  மாலையில் இடம் பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியேட்சகர் சரத்குமார ஜோசப்பின் ஆலோசனைக்கு அமைவாக  உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.சந்திரபாலவின் வழிகாட்டலில் மேற்படி பொலிஸ் குழு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றது.

இந்நிலையில், மடுத்திருத்தலத்துக்;கு வருகைதரும் பக்தர்களின் பாதுகாப்பு, மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக மடுத்திருத்தல நுழைவாயிலில் விசேட பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  பி.எம்.எஸ்.எஸ்.குனசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மடுத்திருத்தல சூழல் புனித பிரதேசம் என்பதால் அங்கு களியாட்ட நிகழ்வுகள் மற்றும் மதுபான பாவனை என்பன தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸார் பகல் மற்றும் இரவு நேர சுற்றுக்காவல் கடமைகளில் ஈடுபடுவதோடு திருத்தல வளாகத்திலும் விசேட கடமைகளில் ஈடுபட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X