2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சிக்கு 10,361 வீடுகள் வேண்டும்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 8,131 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள அதேவேளை, இம்மாவட்டத்தில் சேதமடைந்துள்ள 2,230 வீடுகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் நேற்று புதன்கிழமை (23) தெரிவித்தார்.

கிளிநொச்சியில் மீள்குடியேறுவதற்கு கடந்த 2010ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. அன்றுமுதல் இன்று வரையில் கிளிநொச்சியில் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் 41,227 குடும்பங்களைச் சேர்ந்த 132,513பேர் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இவர்களில் 26,730 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவைப்பட்டதுடன், 6,349 குடும்பங்களின் சேதமடைந்த வீடுகள் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கவேண்டிய தேவையும் காணப்பட்டது.
 
இவர்களின் இந்த வீட்டுத் தேவை படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு தற்போது மேற்குறித்த தொகையிலான வீடுகள் மாத்திரமே தேவையாகவுள்ளன என்று மாவட்டச் செயலாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .