2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

முத்தையன்குளத்தின் மூலம் 1048 ஏக்கரில் செய்கை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முத்தையன்கட்டுக்குளம் மற்றும்; அதன் கீழுள்ள 05 குளங்களின் மூலம் 518 ஏக்கர் நெற்செய்கையையும் 530 ஏக்கர் உப உணவுச் செய்கையையும் மேற்கொள்ளவுள்ளதாக முத்தையன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் இன்று (03) தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் முத்தையன்கட்டுக்குளம் மற்றும் கீழுள்ள 05 குளங்களின் மூலம்; சுமார் 14,000 ஏக்கர்; செய்கை மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், தற்போது வறட்சி நிலவுவதால் குளங்களிலுள்ள நீரின் அளவு  வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், 1,048 ஏக்கர் செய்கையையே இவ்வருடம் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

இதன்படி மருதமடுக் குளத்தின் கீழ் 65 ஏக்கர் நெற்செய்கையும் 51 ஏக்கர் உப உணவுச்; செய்கையும் உடையார் கட்டுக்குளத்தின் கீழ் 303 ஏக்கர் நெற்செய்கையும் பனிக்கேணிக் குளத்தின் கீழ் 100 ஏக்கர் நெற்செய்கையும் 34 ஏக்கர் உப உணவுச்; செய்கையும் தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் 100 ஏக்கர் உப உணவுச் செய்கையும் மடவாளசிங்கம் குளத்தின் கீழ் 50 ஏக்கர் நெற்செய்கையும் 45 ஏக்கர் உப உணவுச் செய்கையும் முத்தையன்கட்டுக்குளத்தின் கீழ் 200 ஏக்கர் உப உணவுச் செய்கையும் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .