2025 ஜூலை 16, புதன்கிழமை

வவுனியாவில் 12 மிதிவெடிகள் மீட்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, கருங்காளிக்குளத்தில் இன்று வியாழக்கிழமை (18) 12 மிதிவெடிகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்தக் கிராமத்தில் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்துக்கான காணியொன்றை நேற்று புதன்கிழமை மாலை (17) துப்பரவு செய்தபோது இந்த மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில்,  நேற்றையதினம் இரவாகியதால்  மிதிவெடிகளை  அகற்றமுடியவில்லை. இதனால், அக்காணிக்கு  பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இன்றையதினம் (18) காலை  மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X