2025 ஜூலை 23, புதன்கிழமை

வடமாகாண வைத்தியசாலைகளில் 125 உள்ளக பயிற்சி வைத்தியர்களை நியமிக்க இணக்கம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண வைத்தியசாலைகளில் 125 உள்ளக பயிற்சி வைத்தியர்களை நியமிப்பதற்கு  சுகாதார அமைச்சர்  மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (2) நடைபெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே  அவர் இதனைக் கூறினார்.

வடமாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பில் கடந்த 02 வாரங்களுக்கு முன்னர்  மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து  கலந்துரையாடியபோதே அவர் இதற்கு இணங்கியதாகவும் ப.சத்தியலிங்கம் கூறினார்.

வடமாகாணத்தில் 38 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளிலேயே அதிகளவில் வைத்தியர்கள்  பற்றாக்குறை  நிலவுவதாகவும் அவர் கூறினார்.

தற்போது மேற்படி வைத்தியசாலைகளில் வடமாகாண சபையின் சுகாதார அமைச்சினால் ஒப்பந்த அடிப்படையில் வைத்தியர்களை பெற்று இயக்குவதாகவும் அவர் கூறினார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .