2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மாந்தை கிழக்கில் 1,345 புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் மொத்தமாக 1,345 புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 324 வீடுகள் பகுதியளவில்  திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009ஆம் ஆண்டு  டிசெம்பர் மாதம் முதல் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 15 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 2,744 குடும்பங்கள் இன்றுவரை மீள்குடியேறியுள்ளன.

இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் 2010ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.  அந்த வகையில், இந்திய வீட்டுத்திட்டத்தில் 03 கட்டங்களாக 784 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 'யு.என். கபிரெட்' நிறுவனத்தினூடாக 316 வீடுகளும் நேப் திட்டத்தின் கீழ் 178  வீடுகளும்  சர்வோதயத்தினூடாக 17 வீடுகளும் இந்திய அரசின் மாதிரி வீடமைப்பு திட்டத்தின் கீழ் 50 வீடுகளும் புதிதாக நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், யு.என். கபிரெட் நிறுவனத்தினூடாக 324 வீடுகள் பகுதியளவில் திருத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X