2025 ஜூலை 16, புதன்கிழமை

வரட்சியால் 29 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

George   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வரட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 29 ஆயிரத்து 294 குடும்பங்களை சேர்ந்த 74 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்தது.

இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகளை, மாவட்ட செயலகம் முன்னெடுத்துள்ளது.

இதற்கான நிதியுதவியை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வழங்கியுள்ளதுடன், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, பிரதேச சபைகள் ஆகியன குடிநீர் விநியோகத்திற்கு உதவி புரிந்து வருகின்றன.

மேலும், வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட (விவசாயம், மீன்பிடி சார்ந்த) மக்களுக்கு, உலக உணவு ஸ்தாபனம், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை,வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலே வரட்சியால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியான காலநிலையில், ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதியும், கடந்த 5ஆம் திகதியும் கிளிநொச்சி மாவட்டத்தில் மழை பெய்திருந்தது.

அத்துடன், இந்த வரட்சியான காலப்பகுதியில் கந்தன் குளத்தில் நீரில் முழ்கி, ஓகஸ்ட்30 ஆம் திகதி மூவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X