2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

டைனமைற் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோகிராம் மீன்கள் அழிப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் டைனமைற் வெடி பொருள் பயன்;படுத்தி பிடிக்கப்பட்ட 500 கிலோகிராம் விள மீன்கள் மன்னார் நீதிமன்றத்தின்  உத்தரவுக்கமைய மண்ணெண்ணெய்  ஊற்றி அழிக்கப்பட்டதாக, மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் பி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை(14) மாலை சௌத்பார் கடற்பரப்பில் டைனமைற் வெடிபொருள் பயன்படுத்தி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மீனவர்கள் 12 பேரை கடலில் வைத்து கடற்படையினர் கைது செய்தனர். 

மீனவர்கள் வைத்திருந்த 500 கிலோ விள மீன்களையும் பறிமுதல் செய்த கடற்படையினர், மன்னார் பொலிஸாரினூடாக மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் குறித்த 12 மீனவர்களும்; நேற்று வெள்ளிக்கிழமை (15) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதோடு குறித்த மீன்களையும் மன்றில் ஒப்படைத்தனர்.

இதன் போது, விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், குறித்த மீனவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததோடு குறித்த மீன்களை அழித்து விடுமாறும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறித்த மீனின் மாதிரி பரிசோதனைக்காக கொழும்பு பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன் அறிக்கை கிடைத்ததும் மீண்டும் இவ் வழக்கு விசாரனை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி  மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறும் போது அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X