2025 ஜூலை 23, புதன்கிழமை

வவுனிக்குளத்தின் 95 வீதமான புனரமைப்புப் பணிகள் பூர்த்தி

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 29 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வவுனிக்குளத்தின் 95 சதவீதமான  புனரமைப்புப் பணிகள் கடந்த டிசெம்பர் மாதம் பூர்த்தியடைந்ததாக வவுனிக்குள புனரமைப்புத் திட்டத்திற்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பா.விகர்னன் தெரிவித்தார்.

600 மில்லியன் ரூபா செலவில் இந்தக் குளத்தின் வேலைகளும் நீர் விநியோகிக்கும் வாய்க்கால்களின் வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
பாண்டியன்குளம் பத்தாம் வாய்க்கால் வீதியும் யோகபுரம் கரும்புள்ளியான் வீதியும் புனரமைக்கப்பட்டதுடன், பாலி ஆற்றுக்கு பாலமும் அமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வவுனிக்குளத்திற்கு கீழுள்ள நீர்ப்பாசன வாய்க்கால் வீதிகளில் 100 கிலோமீற்றர் நீளமான வீதிகள் நிதிப் பற்றாக்குறையால் புனரமைக்கப்படாதுள்ளதாகவும் அவர் கூறினார்.

30 வருடங்களாக புனரமைக்கப்படாதுள்ள வவுனிக்குளத்திற்கு கீழுள்ள நீர்ப்பாசன வாய்க்கால் வீதிகளில் 100 கிலோமீற்றர் நீளமான வீதிகளை புனரமைக்குமாறு வவுனிக்குளம் விவசாய அமைப்புக்கள் இரண்டாவது தடவையாக இன்று புதன்கிழமையும் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வாய்க்கால் வீதிகளை புனரமைப்பதற்கு  நிதி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .