Editorial / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
100 வயதான தாயொருவருக்கு வவுனியா நெடுங்கேணி பகுதியில் நடமாடும் மருத்துவ சேவையினரால் முதலாவது கொரோனா தடுப்பூசி நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசியினை பெற்றுவருகின்றனர். சிலர் அச்சம் காரணமாக தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால் 100 வயது நிரம்பிய ஒரு முதியவர் தடுப்பூசி போட முன்வந்தமை பாராட்டத்தக்க விடயமாகும்.
அந்தவகையில் நெடுங்கேணி, மருதோடைக்கிராமத்தில் வசிக்கும் 100 வயது நிரம்பிய தாயொருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரின் நடமாடும் தடுப்பூசிச்சேவையின் மூலம் முதலாவது தடுப்பூசி நேற்றையதினம் (11) வழங்கப்பட்டது.
இவ்வாறு இந்த வயதிலும் தடுப்பூசி போடவேண்டுமென்று விழிப்புணர்வுடைய ஒருவருக்குகு தடுப்பூசி வழங்கியமையையிட்டு பெருமை கொள்வதாக வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago