2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

12,615 ஏக்கரில் சிறுபோகம்

Niroshini   / 2021 மே 04 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசன குளங்களின் கீழ், இவ்வாண்டு 12,615 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையும் 1,781 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளப்படவுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றின் கீழ் உள்ள 19 குளங்களில், மருதங்குளம் தவிர்ந்த ஏனைய 18 குளங்களிலும், பயிர்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள முத்தையன்கட்டு குளம், கனுக்கேணிக்குளம், தண்ணிமுறிப்பு குளம், மடவாசிங்கன் குளம், விசுவமடுக்குளம், உடையார் கட்டுக்குளம், மருதமடுக்குளம் ஆகிய குளங்களின் கீழும் வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள வவுனிக்குளம், ஐயன்கன்குளம், அம்பலப்பெருமாள் குளம், கோட்டைகட்டிய குளம், பழைய முறிகண்டி குளம், கொல்லவிளாங்குளம், பனங்காமம் குளம், தேறாங்கண்டல் குளம், தென்னியன் குளம், மல்லாவிக் குளம் ஆகிய குளங்களிலும் சிறுசெய்கை மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மருதங்குளம் உடைப்பெடுத்தமையால், அதன் கீழான சிறுபோக செய்கை இம்முறை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .