2025 ஜூலை 23, புதன்கிழமை

மனித புதைகுழி எலும்புகளை மன்னார் வைத்தியசாலையில் வைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2014 ஜனவரி 26 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளை மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடமொன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் நேற்று சனிக்கிழமை (25) 14ஆவது தடவையாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் குறித்த புதைகுழி நேற்று தோண்டப்பட்டது. இதன்போதே குறித்த மனித எலும்புக்கூடு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றபுலனாய்வுப் பிரிவினர் இரண்டாவது நாளாக நேற்று (25) தமது விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக அன்று முதல் தற்போதுவரை குறித்த புதைகுழி தோண்டப்பட்டு வருகின்றது.

தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை பெட்டிகளின் பொதி செய்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அங்கு பெட்டிகளில் பொதி செய்யப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனித புதைகுழியைதட தோண்டும் பணி நாளை திங்கட்கிழமையும் (27) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .