2025 ஜூலை 23, புதன்கிழமை

இந்திய வீட்டுத் திட்டத்தில் புறக்கணிப்பு; நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இன்று (5) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று தமது மகஜரினை வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி.ஆயகுலனிடம் கையளித்திருந்தனர்.

'வவுனியாவில் வசிப்பிடம் நெடுங்கேணியின் கழிவறையா?', 'அதிகாரிகளே! வீட்டுத்திட்டத்தை சீராக வழங்குங்கள்', 'இந்திய வீட்டுத்திட்டத்தில் நெடுங்கேணி வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்' என பதாதைகளை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பியிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பிரதேச செயலாளருடைய கோரிக்கைகளை செவிமடுத்ததுடன் இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன் மற்றுமு; ம.தியாகராசா ஆகியோர் பிரதேச செயலாளர் க.பரந்தாமனுடன் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடினர்.

அதன் பின்னர் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட முறைகள் அதனை வழங்குவதற்குள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .