2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமனம்

Menaka Mookandi   / 2014 மார்ச் 07 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் நீண்டகாலமாக நிலவிவந்த விஞ்ஞானம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில்; கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளனர் என கல்லூரி அதிபர் தில்லையம்பலம் வரதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் குறித்த கல்லூரி பழைய மாணவர்களினால் இவ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் தரம் 6 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களிற்கு விஞ்ஞான பாடங்களிற்குரிய ஆசிரியர்கள் இல்லாமலும் உயர்தர வகுப்புக்களில் உயிரியல் பாடத்திற்கு ஆசிரியர் இன்மையாலும் இங்குள்ள மாணவர்கள் கற்றலில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவ்விரு பாடங்களிற்கும் ஆசிரியர்களை நியமிக்குமாறு அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் விஞ்ஞானம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .