2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆண்களும் மந்த போஷாக்கால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 09 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வடமாகாணத்தில் ஆண்களும் மந்த போஷாக்கால் பாதிப்படைவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய காலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவி அணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (08) நடைபெற்றது. இதில்  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு இன்று தொழில்வாய்ப்புகள் இல்லாத நிலையுள்ளது. கட்டிடங்கள், அபிவிருத்திகள் என்று பேசப்படுகின்றபோதிலும் இதற்காக  வரும் ஒப்பந்தக்காரர்களும் தொழிலாளர்களும் வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றார்கள். இதனூடாக எமது மாகாணத்திற்கு வரவேண்டிய பெருமளவு பணத்தை யாரோ சுரண்டிச் செல்கின்றனர்.

40 சதவீதமான மந்த போஷாக்கு குழந்தைகளுடன் தற்போது ஆண்களும் உள்ளடங்கியுள்ளனர். இது வீரியம் அடைந்து பட்டினிச்சாவு ஏற்படும் வாய்ப்பு உருவாகலாம்.

இதற்காக வடமாகாண விவசாய அமைச்சு சாகாய வேலை மூலமாக பல திட்டங்களை இன்று முன்வைத்து வருகின்றது. அதனூடாகவே எமது பிரதேசத்தில் மந்த போஷாக்கால்  ஏற்படும் இறப்புகளை குறைக்க முடியும்.

இவ்வாறான நிலையில் நிரந்தர நியமனம் பெறுபவர்கள் நியமனத்தை பெற்ற பின்னர் அதனை உதாசீனம் செய்தல் கூடாது. பலர் வேலைவாய்ப்பின்றி உள்ள நிலையில் நியமனம் கிடைத்தவர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்தி தமது தொழிலை சிறப்பாக செய்யவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .