2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கடலாமையை வெட்டியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 17 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், பள்ளிமுனை பகுதியில் கடலாமையொன்றை இறைச்சிக்காக வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மீனவர் ஒருவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபரை மன்னார் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) ஆஜர்படுத்தியபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பள்ளிமுனை பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார்,  சுமார் 03 கிலோகிராம் ஆமை இறைச்சியுடன் இச்சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (16) காலை கைதுசெய்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .