2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போலி கைத்துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் போலி கைத்துப்பாக்கிகளுடன் காரில் பயணித்ததாகக் கூறப்படும் 05 பேரை வவுனியா பொலிஸார் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (27) அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற காரொன்றை  வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியிலுள்ள கல்குனாமடுச் சந்தியில் இடைமறித்துச் சோதனையிட்ட  பொலிஸார்,  அக்காரினுள்;  போலி கைத்துப்பாக்கிகள் 02, கையுறைகள் 10 மற்றும் போலி இலக்க தகடுகள் சிலவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இச்சந்தேக நபர்களை கைதுசெய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து  விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்களில் 04 பேர் கொழும்பையும் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்களாவர்.

இவர்களுக்கு பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .