2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மின்கட்டணத்தினை பிரதேச சபையே செலுத்த வேண்டும் - ரூபவதி

Kogilavani   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி ஏ-9 வீதியில் 2 கிலோமீற்றர் தூரத்திற்கு பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கான மின்கட்டணம் கரைச்சி பிரதேச சபையினூடாகவே செலுத்தப்படவேண்டும் என கிளிநொச்சி மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்கிழமை(1) தெரிவித்தார்.

கிளிநொச்சி ஏ-9 வீதி, நகர்ப்புறத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பொருத்தப்பட்ட மின்விளக்குகளுக்கான மின்கட்டணம் செலுத்தப்படாத காரணத்தினால் கடந்த 2013 செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் குறித்த மின்விளக்குகளுக்கான மின்சார விநியோகத்தினை மின்சார சபை துண்டித்திருந்தது.

மாதாந்தம் 3 இலட்சம் ரூபா செலுத்த வேண்டியிருந்த மேற்படி மின்விளக்குகளிற்கான மின்கட்டணத் தொகையானது 10 இலட்சத்திற்கு அதிகமாக இருந்தமையினாலேயே மின்சார சபை மின் விநியோகத்தினைத் துண்டித்தது.

இந்நிலையில் குறித்த மின்கட்டணத்தின் ஒரு பகுதி தொகையினை கரைச்சி பிரதேச சபை தருவதாகவும் மிகுதியினை கிளிநொச்சி மாவட்டச் செயலர் செலுத்தும் பட்சத்தில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் குறித்த மின் விளக்குகளை ஒளிரவைக்க முடியும் என பிரதேச சபை தெரிவித்திருந்தது.

எனினும் இன்று வரை அது நடைமுறைப்படுத்தாத நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலரிடம் கேட்டபோதே மாவட்டச் செயலர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

'மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக இவ்வாறான நிதிகள் வழங்க முடியாது. ஆனால் வர்த்தக அமைப்புக்கள் ஏனைய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி இந்த நிதியினை பெற்றுக்கொள்ள முடியுமா?  என்று முயற்சிகளை எடுத்திருந்தோம், ஆனால் அதைச் செய்யமுடிவில்லை' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்; கரடிப்போக்குச் சந்தியிலிருந்து நீதிமன்றம் வரையிலான 2 கிலோ மீற்றத் தூரத்திற்கு 144 மின்விளக்குகள் ரூபா 3.4 மில்லியன் ரூபா செலவில் கடந்த 2013ஆம் ஆண்டு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .