2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வயல் விழா

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


விவசாயத்தை மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வயல் விழா வவுனியா முருகனூர் விவசாய பண்ணையில் வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் நிலை காரணமாக, வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் மற்றும் தொழில்நுட்ப யுக்திகளை ஆராய்ந்து கொள்ளவதற்கான வழிவகைகளையும் விவசாய விரிவாக்கல் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வட மாகாண விவசாய பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி மாகாண பணிப்பாளர் அ. சகிலாபானு உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .