2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் வறட்சி விவசாயமும் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக சில பிரதேசங்களில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை அவதான நிலையத்தின் தகவலின் அடிப்படையில் 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை வவுனியா மாவட்டத்தில் பதிவாகிவருவதுடன் இவ் வெப்பம் தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளனர்.

வவுனியாவின் பூமி அமைப்பு கற்பாறையாக காணப்படுவதன் காரணமாக கற்குளம், தேக்கவத்தை, கற்குழி, தோணிக்கல் உட்பட பல பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீர் வற்றிக்; காணப்படுவதனால் நீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை சில குளங்களில் நீர் வற்றிக்காணப்படுவதன் காரணமாக நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது ஜீவனோபாயத்தை இழந்துள்ளனர்;.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .