2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் இரண்டாம் கட்ட அமர்வு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான  இரண்டாம் கட்ட அமர்வு  பிற்போடப்பட்டுள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டு மற்றும் இன்னபிற காரணங்களினால்  இரண்டாம் கட்ட அமர்வு பிற்போடப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகத்தில்  ஏப்ரல் மாதம்  7ஆம் 8ஆம் 9ஆம் திகதிகளில் மேற்படி இரண்டாம் அமர்வு நடைபெறவிருந்தது.

இந்நிலையில், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குச் சமூகமளிக்குமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்ட  விண்ணப்பதாரிகளுக்கு இனிமேல் விசாரணைகள்; நடைபெறவுள்ள திகதி  அறிவிக்கப்படுமென மேற்படி ஆணைக்குழுவின் நிர்வாக அதிகாரி கே.டபிள்யூ.பண்டார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .