2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அபிவிருத்தி நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறுகிறது: ரிஷாட்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த நான்கு வருடங்களில் கல்வி, கலாசாரம், தொழில்வாய்ப்பு, உற்பத்தி ரீதியாக பாரிய அபிவிருத்தியினை நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறிவருகின்றது என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (09) முல்லைதீவு நகரில் பிரதேச சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட 'வாழ்வின் எழுச்சி' என்ற புத்தாண்டு சந்தையை திறந்து வைக்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்நு இங்கு உரையாற்றுகையில்: 

இலங்கையில் கடந்த முப்பது வருடமாக நடைபெற்ற யுத்தத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையை மேன்படுத்தியதோடு தொழில் வாய்ப்புகளையும் பெருமளவில் பெற்றுக்கொடுத்துள்ளோம். 

இவ் சமுதாயத்தை நாம் பாதுகாத்து வழி நடத்தி செல்வது எமது அனைவரினதும் கடமையாகும். மேலும் ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து கொண்டு எமது சமுதாயத்தை கட்டியெழுப்புதல் வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் பிரதம அதியாக கலந்து கொண்டதோடு, ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் ச.கனகரத்தனம், மீள் எழுச்சித்திட்ட பணிப்பாளர் நடராஜா, உதவி அரசாங்க அதிபர், உதவி சமூர்த்தி ஆணையாளர் உட்பட  பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .