2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்குக் செல்வம் எம்.பி கண்டனம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள (17) அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ்.ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் கடந்த திங்கட்கிழமை இரவு வடமராட்சியிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற  இனம் தெரியாத ஆயுததாரிகள் அவர் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இரும்புக்கம்பிகளை பயண்படுத்தி  அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அவர் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
செல்வதீபன் சுதந்திர ஊடகவியலாளராக வடமராட்சி பிரதேச செய்தியாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

தமிழ் மக்களின் அவலங்களை உலகரியச் செய்யும் செல்வதீபன் போன்ற ஊடகவியலாளர்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்தும் கொலை அச்சுருத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை கட்டுப்படுத்த சர்வதேச சமூகம் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே செல்வதீபன்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவத்திற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும். தமிழ் மக்களின் விடிவிற்காக ஊடகங்கள் மூலம் குரல் கொடுத்து வரும் செல்வதீபன் போன்றோர் மீதான தாக்குதலையும், கைதுகளையும்  தமிழ் தேசியக்கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது'  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .