2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மாடு வெட்டியவருக்கு எதிராக வழக்கு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 21 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, பட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமாக மாடு வெட்டியவர்கள் பிடிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  வவுனியா நகரசபை வருமான பரிசோதகர் இ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஞாயிற்றுக்கிழமை (20) பட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமாக மாடு வெட்டப்படுவதாக தொலைபேசி மூலம் வவுனியா நகரசபை செயலாளருக்கு கிடைத்த தகவலையடுத்து அதனை கைப்பற்றுவதற்காக நகரசபை உத்தியோகஸ்த்தர்கள் உட்பட்ட குழு சென்றிருந்தது.

நாம் அங்கு சென்ற போது பட்டக்காடு பகுதியில் உள்ள வீடொன்றில் 2 வயது மதிக்கத்தக்க மாடு ஒன்று வெட்டப்பட்டு, அதன் இறைச்சி பாயினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. அதனை கைப்பற்றியதையடுத்து மாடு வெட்டப்பட்ட இடம் குறித்து விசாரித்தோம்.

குறித்த வீட்டு உரிமையாளர்கள் கறையான்குளம் பகுதியில் வைத்து அவ் மாட்டினை வெட்டியதாக கூறியதையடுத்து அங்கு சென்று மாடு வெட்டப்பட்ட போது வீசப்பட்ட மண்டையோடுகள், மாட்டின் கால்கள், தோல் உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளோம்.

சுகாதார சீர்கேடு மிக்க இடத்தில் வைத்து மாடு வெட்டப்பட்டுள்ளதுடன், கால்வாய் நோய் தாக்கம் பரவிவருகின்ற நிலையில் கால்நடை வைத்திய அதிகாரியினாலும் இம்மாடு பரிசோதிக்கப்படவில்லை.

இதனையடுத்து மீட்கப்பட்ட இறைச்சியையும்; அதை வெட்டியவரையும் வவுனியா நீதிமன்றத்தில் திங்கட்கிழமை(21) ஆஜர்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .