2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சிறுபோகத்திற்கான மானிய உரம் கையிருப்பில்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்குவதற்கு தேவையான உரம் கையிருப்பில் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஈ.தயாரூபன் தெரிவித்தார்.

சிறுபோக நெற்செய்கையின்போது உர மானியம் சரியாக, உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லையென்று விவசாயிகளினால் வழமையாக குற்றஞ்சாட்டப்பட்டு வருவது வழமையாகும்.

ஆனால், இம்முறை அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதென்பதுடன்,  விவசாயிகளுக்கு வழங்குவதற்கு போதியளவு உரம் கையிலிருப்பில்  இருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .