2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தந்தை, மகள் மீது தாக்குதல்: கொள்ளையர்கள் கைவரிசை

Super User   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தந்தை மற்றும் மகளை தாக்கி கொள்ளையிட்டு சென்ற சம்பவம் நேற்று(23) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்திற்கு பின்புறமாக உள்ள வீட்டிற்கு வெளியில் தந்தை, தாய், மற்றும் இரு பெண் பிள்ளைகள் கதைத்துக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த சிலர் மின்குமிழை உடைத்துள்ளனர்.

மேலும் 66 வயதுடைய பஞ்சாட்சரம் சிவபாலனை தாக்கியதுடன் இவரது மகளான் 23 வயது யுவதி வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது தாய் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை மாத்திரம் திருடர்கள் கொள்ளையிட்டுள்ளதாகவும் மகள் அணிந்திருந்த சங்கிலியை திருடர்கள் அறுத்த போதிலும் அது பின்னர் வீட்டின் வளவினுள் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கொள்ளைச் சம்பவத்தில் கடும் காயத்திற்கு உள்ளான தந்தை மற்றும் மகள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .