2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கண்டாவளையில் கால்நடைகளுக்கு நோய் தொற்றில்லை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 30 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திலுள்ள கால்நடைகளுக்கு ஏற்பட்டுவந்த நோய்கள் முற்கூட்டிய நடவடிக்கைகளினால் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாக கண்டாவளை பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி புதன்கிழமை (30) தெரிவித்தார்.

இப்பிரதேசத்திலுள்ள  சில கால்நடைகளுக்கு கால்வாய் நோய் உள்ளிட்ட  நோய்கள் ஏற்பட்டிருந்தன.  எனினும், வைத்திய அதிகாரி பணிமனையால் மேற்கொள்ளப்பட்ட முற்;கூட்டிய விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் நடமாடும் சிகிச்சை முகாம்களின் மூலம்  நோய்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதுடன்,  ஏனைய கால்நடைகளுக்கும் பரவாது  தடுக்கப்பட்டது.

இதனால்,  கால்வாய் நோய் உள்ளிட்ட நோய்கள் கால்நடைகளுக்கு தொற்றாத பிரதேசமாக கண்டாவளை பிரதேசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X