2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே: மன்னார் ஆயர்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது' என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் நாழிதலான புதியவன் தனது 150ஆவது இதழை நேற்று சனிக்கிழமை வெளியிட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதும், காணாமல் போவதும் ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் என நீண்டகாலமாக இருந்துவரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது' என்றார்.

அத்துடன், 'உண்மைகள் வெளி வந்து விடும் எனும் அச்சத்தினாலேயே அரச கையாட்கள் இவ்வாறான தீய காரியங்களை மேற்கொள்கின்றனர்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X